கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் மட்டுமே காணப்பட்டனர்.. ஜே.பி.நட்டா தாக்கு

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் மட்டுமே காணப்பட்டனர்.. ஜே.பி.நட்டா தாக்கு

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் டிவிட்டரில் மட்டுமே காணப்பட்டனர் என்று எதிர்க்கட்சி தலைவர்களை ஜே.பி.நட்டா விமர்சனம் செய்தார்.

டெல்லியில் நேற்று தேசிய சுகாதார தன்னார்வ பிரச்சார தொடக்க விழாவில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து அரசியல் கட்சிகளும் தனிமையில் இருந்தன. அந்த கட்சியின் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளிலும், டிவிட்டர்களிலும் மட்டுமே காணப்பட்டனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் மட்டுமே காணப்பட்டனர்.. ஜே.பி.நட்டா தாக்கு
டிவிட்டர்

கோவிட்-19ன் போது, பா.ஜ.க. தொண்டர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்தனர். பா.ஜ.க. ஒரு தேர்தல் சண்டை எந்திரம் அல்ல. ஆனால் அது மனித குலத்துக்கு சேவை செய்ய பணியாற்றுகிறது. தேசிய சுகாதார தன்னார்வ பிரச்சாரத்தின் வாயிலாக இரண்டு லட்சம் கிராமங்களை அடைந்து 4 லட்சம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதே எங்கள் நோக்கம்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் மட்டுமே காணப்பட்டனர்.. ஜே.பி.நட்டா தாக்கு
பா.ஜ.க.

ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் மாவட்ட அளவில் பயிற்சி முடிக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் மண்டல அளவிலான பயிற்சி முடிக்கப்பட வேண்டும். பிரச்சாரத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய 48 ஆயிரம் பேர் தாங்களாக முன்வந்து பதிவு செய்துள்ளனர். கோவிட் நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது என்பதையும் இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. ஆக்சிமீட்டர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர்களை உள்ளடக்கிய கருவிகளையும் நாங்கள் வழங்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.