நாளை தமிழகம் வருகிறார் ஜேபி நட்டா! முக அழகிரியை சந்திக்க திட்டம்?

 

நாளை தமிழகம் வருகிறார் ஜேபி நட்டா! முக அழகிரியை சந்திக்க திட்டம்?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பாஜக தலைவர்கள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். அண்மையில் சென்னை வந்திருந்த அமித்ஷா, அரசு விழாவில் பங்கேற்று தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி படுத்திவிட்டுச் சென்றார். அதன்பின் தொகுதி பங்கீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அமித்ஷா மீண்டும் சென்னை வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவரது பயணம் தடைபட்டதாக தமிழக பாஜக தலைமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து துக்ளக் வார இதழ் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வந்தார். அப்போது பாஜக சார்பில் நடத்தப்படும் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியிலும் பங்கேற்று சென்றார்.

நாளை தமிழகம் வருகிறார் ஜேபி நட்டா! முக அழகிரியை சந்திக்க திட்டம்?

இந்நிலையில் நாளை இரவு மீண்டும் மதுரை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா; ஜன.30ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வார் என்றும் 31ம் தேதி புதுச்சேரியில் பாரதியார் சிலைக்கு மரியாதை செய்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நட்டா தலைமையில் பாஜவின் மாநில மைய குழுக்கூட்டம் 30-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மாலை 5.15 மணிக்கு முக்கிய நபர்களுடன் தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மதுரை செல்லும் நட்டா மு.க.அழகிரியை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. மற்றொரு புறம் ஜெயலலிதா கோவிலை திறக்க அன்று ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் மதுரையில் இருக்கும் சுழலில் அவர்களுடன் நட்டா சந்திப்பு இருக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.