குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்… ஜே.பி. நட்டா தகவல்

 

குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்… ஜே.பி. நட்டா தகவல்

குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம் சிலிகுரியில் நடந்த சமாஜிக் சாமுஹா கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். தலித்துகள், கோர்காக்கள், ராஜ்பன்ஷிகள் மற்றும் பிற பழங்குடியினர் உள்பட அனைத்து சமூக பிரிவினரிடமும் நட்டா கலந்துரையாடியானார். அப்போது அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை பொறுத்தவரை நீங்கள் அனைவரும் அந்த சட்டத்தின் பலன்களை பெறுவீர்கள். இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாம் அதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்… ஜே.பி. நட்டா தகவல்
பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா

கோவிட்-19 தொற்று நோய் காரணமாக குடியுரிமை திருத்த சட்டம் செயல்படுத்துவது தாமதமானது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பது குறைந்து வருவதால் சி.ஏ.ஏ.வை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது விதிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இது விரைவில் அமல்படுத்தப்படும்.

குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்… ஜே.பி. நட்டா தகவல்
திரிணாமுல் காங்கிரஸ்

தற்போதைய திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் மாநிலத்தில் பிரிவினை மற்றும் ஆட்சி அரசியலில் ஈடுபடுகிறது. பா.ஜ.க. கட்சி அனைவருக்கும் அபிவிருத்திக்காக செயல்படுகிறது. மேற்கு வங்கத்தில் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு அனுமதிக்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால், இந்த திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.