ராகுல் காந்தி குறித்து அப்படி பேசியது தப்புதான்… பகிரங்க மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

 

ராகுல் காந்தி குறித்து அப்படி பேசியது தப்புதான்… பகிரங்க மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

ராகுல் காந்தி குறித்து அவதூறாக பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.பி. ஜோய்ஸ் ஜார்ஜ் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

கேரள மாநிலம் இடுக்கியில் கடந்த சில தினங்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பி. ஜோய்ஸ் ஜார்ஜ் பேசுகையில், ராகுல் காந்தியின் நிகழ்ச்சிகள் அனைத்து பெண்கள் கல்லூரியில் மட்டுமே நடக்கிறது. அவர் அங்கு சென்று, எப்படி நேராக நிற்பது, எப்படி குனிவது என்று பெண்களுக்கு சொல்லி கொடுக்கிறார். என் அருமை குழந்தைகளை, அவர் அருகே செல்லாதீர்கள், அது போன்று செய்யாதீர்கள்.. அவர் திருமணம் ஆகாதவர் என தெரிவித்தார்.

ராகுல் காந்தி குறித்து அப்படி பேசியது தப்புதான்… பகிரங்க மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.
தற்காப்பு கலை கற்றுக்கொடுக்கும் ராகுல் காந்தி

ராகுல் காந்தி குறித்து மோசமாக மற்றும் பெண்களுக்கு எதிராக பேசியதற்காக ஜோய்ஸ் ஜார்ஜை கைது செய்ய வேண்டும் என கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், கேரள காங்கிரசின் மகளிர் அணியினர், பெண்களை அவமானபடுத்தியதற்காக ஜோய்ஸ் ஜார்ஜ்க்கு எதிராக தலைமை செயலகம் முன் போராட்டம் நடத்தினர். ராகுல் காந்தி குறித்த தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஜோய்ஸ் ஜார்ஜ் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

ராகுல் காந்தி குறித்து அப்படி பேசியது தப்புதான்… பகிரங்க மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.
ஜோய்ஸ் ஜார்ஜ்

ஜோய்ஸ் ஜார்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், இதற்கு முன் ஒரு போதும் செய்யப்படாத ஒரு பொருத்தமற்ற குறிப்பு இருந்ததை நான் அறிந்தபோது நான் நிபந்தனையின்றி வாபஸ் பெற்றேன். பகிரங்கமாக மன்னிப்பு கேட்டேன். இது என்னை போன்ற ஒருவரிடமிருந்து வந்திருக்கக் கூடாத ஒரு குறிப்பு என்பதில் சந்தேகமில்லை. பொது இடத்தில் மட்டுமல்ல, தனிப்பட்ட உரையாடலிலும் எச்சரிக்கையின் அவசியத்தை அறிந்து கொள்ள எனக்கு உதவியது என பதிவு செய்து இருந்தார்.