2014 ஆம் ஆண்டிலிருந்தே வங்கிகள் மீதான அழுத்தங்கள் அதிகரிப்பு: எம்பி ஜோதிமணி

 

2014 ஆம் ஆண்டிலிருந்தே வங்கிகள் மீதான அழுத்தங்கள் அதிகரிப்பு: எம்பி ஜோதிமணி

லக்ஷ்மி விலாஸ் வங்கி, கடந்த 4 ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நஷ்டம் அதிகரிப்பதால் வங்கியை மூடக்கூடிய அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. லக்ஷ்மி விலாஸ் வங்கி தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை தான் எடுக்க முடியும் என்றும் அவசர தேவைகளுக்காக மட்டுமே ரூ.25 ஆயிரத்துக்கு மேல் கொடுக்கப்படும் என்றும் திடீர் அறிவிப்பு வெளியானது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2014 ஆம் ஆண்டிலிருந்தே வங்கிகள் மீதான அழுத்தங்கள் அதிகரிப்பு: எம்பி ஜோதிமணி

இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி ஜோதிமணி, “கரூர் லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடை தொழில் துறை பாதிக்கும் அபாயம். வங்கியில் நடப்பு கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தி, கொசுவலை தயாரிப்பு, பேருந்து கூண்டு கட்டும் தொழில் பாதிக்கும். மத்திய நிதி அமைச்சகம் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும். இது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்தே வங்கிகள் மீதான இதுபோன்ற அழுத்தங்கள் தொடர்கிறது. இது தொழில் உற்பத்தி, தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும்” என்றார்.