“பிபி, சுகர் இருக்கு… சிலுவையா சுமக்கிறேன்” – ‘தோல்வி பயம்னா இதான் விஜயபாஸ்கர்’

 

“பிபி, சுகர் இருக்கு… சிலுவையா சுமக்கிறேன்” – ‘தோல்வி பயம்னா இதான் விஜயபாஸ்கர்’

அமைச்சர் விஜயபாஸ்கரின் கோட்டை என்று விராலிமலை கூறப்படுகிறது. அங்கு தொடர்ந்து இருமுறை வெற்றிபெற்றிருக்கிறார். இந்த முறையும் அங்கு போட்டியிடுகிறார். எங்க அண்ணன் படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என அதிமுகவினர் பில்டப் கொடுக்கின்றனர். ஆனால் நான் படும் பாடு எனக்கு தான் தெரியும் என்ற ரீதியிலேயே வீதி வீதியாகக் களமிறங்கி பிரச்சாரம் செய்கிறார் விஜயபாஸ்கர். சென்ற முறை மூத்த மகளைப் பிரச்சாரத்துக்கு இறக்கிய அவர், இம்முறை இளைய மகளையும் இறக்கிவிட்டிருக்கிறார். இதெல்லாம் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

“பிபி, சுகர் இருக்கு… சிலுவையா சுமக்கிறேன்” – ‘தோல்வி பயம்னா இதான் விஜயபாஸ்கர்’

இச்சூழலில் ராசநாயக்கன்பட்டி மாதா கோயில் பகுதியில் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, ”கொரோனா காலத்தில் என்னுடைய உடல் எடை 7.5 கிலோ குறைந்துவிட்டது. எனக்கும் பிபி இருக்கிறது. சுகர் இருக்கிறது. மாத்திரை சாப்பிடுகிறேன். தலை சுற்றல், மயக்க பிரச்சினைகளும் இருக்கின்றன. ஆனாலும் மனதில் வெறி இருக்கிறது. எடுத்துக்கொண்ட பொறுப்பை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, இயேசு நாதர் சிலுவையைச் சுமந்தது போல, விராலிமலை தொகுதியை நான் தூக்கி சுமந்து கொண்டிருக்கிறேன். என் மக்களுக்காக உழைக்கிறேன்” என்று உருக்கமாகப் பேசி வாக்கு சேகரித்தார்.

இதனை விமர்சித்து ஜோதிமணி எம்பி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், “அட!அட! வருஷத்துக்கு 25-40 நாட்கள் மட்டும் நூறுநாள் வேலை,கோழி கூட சாப்பிடாத ரேஷன் அரிசி, நீங்களே போட்டு ஒரு வருஷத்துல பிஞ்சுபோன சாலைகள். உங்க சொத்துமட்டும் விலைவாசியவிட வேகமா ஏறியிருக்கு. ஆனால் விராலிமலை தொகுதி நலிந்துகிடக்கிறது. நீங்க சிலுவை சுமந்த லட்சணம்! தோல்விபயம் என்பது இதுதான்!” என்று விமர்சனம் செய்துள்ளார்.