ஆளும் கட்சியினர் என்னைத் தரக்குறைவாக பேசுகின்றனர்- காவல்நிலையத்தில் ஜோதிமணி புகார்

 

ஆளும் கட்சியினர் என்னைத் தரக்குறைவாக பேசுகின்றனர்- காவல்நிலையத்தில் ஜோதிமணி புகார்

சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கிறோம் என்ற பெயரில், மணல் கொள்ளையில் ஆளும் கட்சியினர் ஈடுபடுவதாக கரூர் எம்.பி ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆர்.கோம்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, “திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.கோம்பை சீலக்கரட்டில் சிட்கோ தொழிற்பேட்டை என்ற பெயரில் 200 கோடி மண்வளத்தை கொள்ளையடிக்க ஆளுங்கட்சியினர் முயற்சி இதனை தடுக்க வந்த என்னை தரக்குறைவாக பேசிய அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் மீது புகார் கொடுக்க உள்ளேன். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அனுமதியுடன் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆளும் கட்சியினர் என்னைத் தரக்குறைவாக பேசுகின்றனர்- காவல்நிலையத்தில் ஜோதிமணி புகார்

தரிசு நிலத்தில் சிட்கோ, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கலாம். அதன் மூலம் வேலைவாய்ப்பினை உருவாக்கலாம். அதற்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார். ஆனால், சீலக்கரட்டில் சிட்கோ தொழிற்பேட்டை என்ற பெயரில், ரூ200 கோடி மதிப்புள்ள மண்வளத்தை கொள்ளையடிக்க ஆளும் கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர்” எனக் கூறினார்.