”34 செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்” ஜோக்கர் மால்வேர் பாதிப்பு – கூகுள் அதிரடி!

 

”34 செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்” ஜோக்கர் மால்வேர் பாதிப்பு – கூகுள் அதிரடி!

பணம் திருடும் ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்ட 34 செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கி உள்ளது.

பிளே ஸ்டோரின் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வரும் செயலிகள் மட்டுமின்றி, ஆண்டிராய்ட் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் பணத்தை திருடும் செயலிகளை கண்டறிந்து அவற்றை பிளே ஸ்டோரில் இருந்து தொடர்ச்சியாக கூகுள் நிறுவனம் நீக்கி வருகிறது. அந்த வரிசையில் ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்ட 34 செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கி உள்ளது தெரியவந்துள்ளது.

”34 செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்” ஜோக்கர் மால்வேர் பாதிப்பு – கூகுள் அதிரடி!

ஜோக்கர் மால்வேர் எனப்படும் ஆபத்தான ஒரு தீய மென்பொருளால் கூகுளுக்கு தலைவலி உருவெடுத்துள்ளது என்று சொல்லலாம். குறியீட்டில் சிறிய மாற்றங்களை செய்து, ஆண்டிராய்ட் பாதுகாப்பு அம்சத்தில் சிக்காமல், பிளே ஸ்டோருக்குள் புகுந்துவிடும் இந்த ஜோக்கர் மால்வேர்கள், அங்குள்ள செயலிகள் பின்னால் மறைந்துகொள்கின்றன. பின்னர், அந்த செயலிகளை பதிவிறக்கம் செய்யும் ஆண்டிராய்ட் பயனர்களுக்கே தெரியாமல், அவர்களை குறிப்பிட்ட சில பிரிமீயம் சேவைகளில் சந்தா செலுத்த வைத்து, அவர்களிடம் இருந்து பணத்தை திருடுகின்றன.

”34 செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்” ஜோக்கர் மால்வேர் பாதிப்பு – கூகுள் அதிரடி!

இந்த ஆபத்தான ஜோக்கர் மால்வேரை சில ஹேக்கர்கள் பின்னால் இருந்து இயக்கி, அதன் மூலம் பணம் திருடுவதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இத்தகைய ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்ட 34 செயலிகளை கூகுள் நிறுவனம் கண்டறிந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளது. பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்த 34 செயலிகள், ஏற்கனவே ஸ்மார்ட்போன்களில் நிறுவப்பட்டு இருந்தால், பணம் திருடு போவதற்கு முன்பாக அவற்றை நீக்கிவிடுவது நல்லது என துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • எஸ். முத்துக்குமார்