இந்த இணையதளம் மூலம் திமுகவில் இணையலாம்!

 

இந்த இணையதளம் மூலம் திமுகவில் இணையலாம்!

திமுகவில் இணையதளம் மூலம் இணைந்து கொள்ளும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தொடங்கி வைத்தார். “எல்லோரும் நம்முடன்” என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கை மூலம் இணைந்து கொள்ளும்படியும் கோரிக்கை விடுத்தார். அதன்படி திமுகவில் இணைய விரும்புபவர்கள் https://www.dmk.in/joindmk/ என்ற இணையதளம் செல்ல வேண்டும். பின்னர் உங்கள் செல்போன் எண் பதிவு செய்தால் OTP வரும்.

இந்த இணையதளம் மூலம் திமுகவில் இணையலாம்!

அந்த OTP பதிவு செய்தால் விண்ணப்ப படிவம் வரும். அதில் உங்களுடைய பெயர், முகவரி, ஈமெயில் முகவரி, வாக்காளர் அட்டை, வாட்ஸ்அப் விவரங்களை தந்தால் உடனடியாக உறுப்பினர் அட்டை வந்துவிடும். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்