ஜோ பைடன் முன்னிலையில் இருக்கும் மூன்று மாகாணங்கள் இவைதாம்!

 

ஜோ பைடன் முன்னிலையில் இருக்கும் மூன்று மாகாணங்கள் இவைதாம்!

நான்கு நாட்களாகியும் ஒரு முடிவு தெரியாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது அமெரிக்க தேர்தல் நிலவரம். நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் விறுவிறுப்போடு நடந்தது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

தேர்தல் முடிந்த அடுத்த நாளே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதிபராவதற்கு மெஜாரிட்டியான 270 வாக்குகளை நோக்கி இருவரும் முன்னேறினர். ஆனால், ஜோ பைடன் 264 – ட்ரம்ப் 214 என்ற வாக்குகளோடு குழப்பம் நான்கு நாட்களாக நீடித்து வருகிறது.

ஜோ பைடன் முன்னிலையில் இருக்கும் மூன்று மாகாணங்கள் இவைதாம்!

ஜோ பைடன் வெல்ல இன்னும் 6 வாக்குகள் மட்டுமே தேவை எனும் சூழலில் அவர் மூன்று மாகாணங்களில் முன்னிலையில் இருக்கிறார். அவை எவை என்று பார்ப்போம்.

ஜார்ஜியா: இங்கு 99 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பைடன் 24,56,845 வாக்குகள் பெற்று 49.4 சதவிகிதத்தோடு முதல் இடத்தில் இருக்கிறார். 24,52,825 வாக்குகள் பெற்று (அதாவது சுமார் 4 ஆயிரம் வாக்குகள் குறைவு) இரண்டாம் இடத்தில் இருக்கிறார் ட்ரம்ப்.

ஜோ பைடன் முன்னிலையில் இருக்கும் மூன்று மாகாணங்கள் இவைதாம்!

பென்சில்வேனியா: இங்கும் 99 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. இந்த மாகாணத்தில் 33,37,069 வாக்குகள் பெற்று 49.6 சதவிகிதத்தோடு ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். 33,08,192 வாக்குகளோடு 49.2 சதவிகிதத்தோடு ட்ரம்ப் பின்னடவை சந்தித்து வருகிறார்.

நிவேடா: 87 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 6,32,558 வாக்குகளைப் பெற்று 49.8 சதவிகிதத்தோடு முன்னேறிச் செல்கிறார் ஜோ பைடன். 6,09,901 வாக்குகளோடு 48.0 சதவிகிதத்தோடு ட்ரம்ப் பின் தங்கியிருக்கிறார்.

இந்த மூன்று மாகாணங்களில் எது ஒன்றில் பைடன் வென்றாலும், அதிபருக்கான மெஜாரிட்டி வாக்குகள் கிடைத்துவிடும்.