Home உலகம் இந்திய வம்சாவளியினருக்கு தொடந்து வாய்ப்பு - ஜோ பைடனின் அடுத்த அறிவிப்பு

இந்திய வம்சாவளியினருக்கு தொடந்து வாய்ப்பு – ஜோ பைடனின் அடுத்த அறிவிப்பு

இன்னும் இரண்டே மாதங்களில் அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்க இருக்கிறார் ஜோ பைடன். நவம்பர் 3-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள். நான்கைந்து நாட்களாக முடிவில் இழுபறி நீடித்தது. இறுதியாக, பலரும் கணித்த ஜோ பைடன் அதிபராகும் மெஜாரிட்டியைப் பெற்றார்.

இந்திய வம்சாவளியினருக்கு தொடந்து வாய்ப்பு - ஜோ பைடனின் அடுத்த அறிவிப்பு
இந்திய வம்சாவளியினருக்கு தொடந்து வாய்ப்பு - ஜோ பைடனின் அடுத்த அறிவிப்பு

ஜோ பைடன் தேர்தல் வாக்குறுதியாக முக்கியமான ஒன்றைக் கூறியிருந்தார். அதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிரமாக பணிகளை முடக்கி விடுவது. அதன் முதற்கட்டமாக சில நாட்களுக்கு முன், மருத்துவக்குழு ஒன்றை அமைத்தார் ஜோ பைடன். அக்குழுவில் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மூவர் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், மருத்துவர் விவேக் மூர்த்தி. ஒபாமா ஆட்சிக்காலத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த இவரை ட்ரம்ப் அதிபரானதும் நீக்கிவிட்டார். இவரின் தந்தை பிறந்தது வளர்ந்தது இந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தில்தான். மற்றொருவர் அதுல் கவண்டே.

மற்றொருவர் செலின் கவுண்டர். ஈரோடு, மொடக்குறிச்சியைப் பகுதி பெருமாபாளையம் எனும் கிராமத்தின் திருமலை என்பவரின் மகன் நடராஜன். இவர் ஐஐடி படித்து அமெரிக்காவுக்குச் சென்றார். அவரின் மகள்தான் செலின் கவுண்டர்.

இந்திய வம்சாவளியினருக்கு தொடந்து வாய்ப்பு - ஜோ பைடனின் அடுத்த அறிவிப்பு

இந்தியர்களுக்கு ஜோ பைடன் குழுவில் இடம் அளித்ததற்காகப் பலரும் பாராட்டு தெரிவித்தனர். தற்போது இன்னொரு குழு ஒன்றை அமைத்திருக்கிறார் ஜோ பைடன் அதிலும் இந்தியர்களைப் பங்கேற்க வைத்திருக்கிறார்.

தற்போதைய அதிபர் ட்ரம்பிடம் உள்ள அலுவல்களையும் அதிகாரங்களை ஜோ பைடனுக்கு மாற்றி அமைக்க குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பணிகள் சீராக நடைபெறும்பட்சத்தில் ஜோ பைடன் ஜனவரி 20 -ம் தேதி பதவி ஏற்க ஏதுவாக இருக்கும். அப்படி அமைக்கப்பட்ட குழுக்களில் 20 இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவர்களை நியமித்திருக்கிறார் ஜோ பைடன்.

ஜோ பைடன் தொடர்ந்து இந்திய வம்சவாளியினருக்கு வாய்ப்புகள் வழங்கி வருவதைப் பலரும் சிலாகித்து புகழ்ந்து வருகின்றனர்.

இந்திய வம்சாவளியினருக்கு தொடந்து வாய்ப்பு - ஜோ பைடனின் அடுத்த அறிவிப்பு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

புதுச்சேரியில் முதல் முறையாக அரியணை ஏறும் பாஜக!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ்...

காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் பரபரப்பு புகார்!

போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கி சிலர் தனது பெயரில் அவதூறு பரப்பி வருவதாக நடிகர் செந்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நகைச்சுவை...

“கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி” – மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா உறுதி!

கோவை கோவை மாநகராட்சியை கொரோனா இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதே தனது முதல் இலக்கு என்று, புதிய ஆணையராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்தார்.

எடப்பாடி கொடுத்த திடீர் பரிசு ; திக்குமுக்காடிப் போன எம்எல்ஏக்கள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி பெற்றாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் எதிர்க்கட்சித் தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ. பன்னீர்செல்வமும் இப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர்...
- Advertisment -
TopTamilNews