இன்னொரு மாகாணத்திலும் ஜோ பைடன் வெற்றி – ட்ரம்ப் கனவு தகர்ந்தது

 

இன்னொரு மாகாணத்திலும் ஜோ பைடன் வெற்றி – ட்ரம்ப் கனவு தகர்ந்தது

வல்லரசு நாடான அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதன் இழுபறி இன்றும் நீடிக்கிறது. இந்தத் தேர்தகில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

பல கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்ட்டினார். ஓரிரு நாள் இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார். ஆயினும் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இன்னொரு மாகாணத்திலும் ஜோ பைடன் வெற்றி – ட்ரம்ப் கனவு தகர்ந்தது

அமெரிக்காவில் இன்னும் முடிவு அறிவிக்கப்படாத மாகாணங்களில் ஒன்று ஜார்ஜியா. இந்த மாகாணம் எப்போதுமே குடியரசுக் கட்சியின் கோட்டியாக இருந்து வந்துள்ளது. இங்கு வெல்பவருக்கு அதிபருக்கான வாக்குகள் 16 கிடைக்கும். அதனால், ட்ரம்ப் இதன் முடிவை வெகுவாக எதிர்பார்த்து காத்திருந்தார். ஏனெனில், 290 வென்றிருந்தாலும் இதில் தான் வென்றால் நீதிமன்றத்தில் கோரியிருப்பது வலுவாகும் என நினைத்தார்.

ஆனால், ட்ரம்ப் கனவு தகர்ந்தது. ஆம். ஜார்ஜியாவில் தனது வெற்றி கொடியைப் பறக்க விட்டிருக்கிறார் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன்.  ஜாரிஜியா மாகாணத்தில் தற்போதைய நிலவரப்படி 49.5 சதவிகித வாக்குகள் ஜோ பைடனுக்கும் 49.3 வாக்குகள் ட்ரம்ப்க்கும் கிடைத்திருக்கின்றன. வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் 13 வாக்குகள் பைடன் முன்னேறியிருக்கிறார். 99 சதவிகித வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் பைடனின் வெற்றி உறுதியானது. எனவே இங்கிருந்து கிடைக்கும் அதிபருக்கான வாக்குகள் 16 –ம் பைடனுக்கே கிடைத்துள்ளது.

இன்னொரு மாகாணத்திலும் ஜோ பைடன் வெற்றி – ட்ரம்ப் கனவு தகர்ந்தது

ஜார்ஜியா வெற்றி மூலம் ஏற்கெனவே கிடைத்த 290 வாக்குகளோடு 16 வாக்குகள் சேர்ந்து 306 வாக்குகளோடு அசைக்க முடியாத வெற்றியைப் பெற்றிருக்கிறார் பைடன். இதன்மூலம், நீதிமன்றத்தில் ஓரிரு இடங்களில் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டாலும், பைடன் அதிபராவதைத் தடுக்க முடியாது.

ஜனவரி மாத இறுதியில் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொள்ள விருக்கிறார்.