அமெரிக்க தேர்தலில் முன்கூட்டியே ஓட்டு போட்டார் ஜோ பைடன்!

 

அமெரிக்க தேர்தலில் முன்கூட்டியே ஓட்டு போட்டார் ஜோ பைடன்!

உலகளவில் அரசியலாளர்கள் உற்று கவனித்து வரும் விஷயங்கள் இரண்டு. ஒன்று, கொரோனா பரவலும் தன் தாக்கமும். இரண்டாவது அமெரிக்க தேர்தல் அப்டேட்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவின் அதிபர் தேர்தலுக்கு. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

அமெரிக்க தேர்தலில் முன்கூட்டியே ஓட்டு போட்டார் ஜோ பைடன்!

ட்ரம்ப் – ஜோ பைடன் இடைப்பட்ட நாட்களில் கடும் விவாதங்கள் புரிந்தனர். இருவரின் பிரசாரத்தில் அனல் பறந்தன. கொரோனா பரவலை மிக அலட்சியமாகக் கையாண்டார் என்பது ஜோ பைடனின் முதன்மையான குற்றச்சாட்டு.

பைடன் சொல்வது சரிதா என்பது போல, உலளவில் அதிக கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்காதான். புதிய நோயாளிகள் அதிகரிப்பதிலும் முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை 2,33,130 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்க தேர்தலில் முன்கூட்டியே ஓட்டு போட்டார் ஜோ பைடன்!

அமெரிக்கச் சட்டம்படி தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்க முடியும். அதனால், கடந்த 26-ம் தேதி தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது வாக்கைச் செலுத்தினார். நேற்று ட்ரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜோ பைடன் தனது வாக்கை, சொந்த ஊரான வில்மிங்க்டனில் பதிவு செய்தார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில். பல கருத்து கணிப்புகள் ஜோ பைடன் வெல்லவே வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி வருகின்றன. ஆனாலும், உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரித்தார் ட்ரம்ப் எனும் ஒரு சீட்டு ட்ரம்ப் வெல்ல காரணமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.