அமெரிக்க அதிபரோடு நேரடி விவாதத்திற்கு கண்டிசன் போடும் ஜோ பைடன்!

 

அமெரிக்க அதிபரோடு நேரடி விவாதத்திற்கு கண்டிசன் போடும் ஜோ பைடன்!

அமெரிக்காவில் தேர்தல் பணிகள் பரபரத்துக்கொண்டிருக்கும் வேளையில் அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி மீண்டு வந்திருக்கிறார்.

அடுத்த மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பைடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

அமெரிக்க அதிபரோடு நேரடி விவாதத்திற்கு கண்டிசன் போடும் ஜோ பைடன்!

அதிபர் ட்ரம்ப் – ஜோ பைடன் நேருக்கு நேராக விவாதிக்கும் சென்ற மாதம் 29-ம் தேதி நடந்தது. அதில் காரசாரமான வாதங்கள் இருதரப்பிலும் முன்வைக்கப்பட்டன. இவர்கள் மீண்டும் இம்மாதம் 15-ம் தேதி நேரில் விவாதிக்கும்படியாக நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டிருந்தது.

அமெரிக்க அதிபரோடு நேரடி விவாதத்திற்கு கண்டிசன் போடும் ஜோ பைடன்!

இதற்கிடையில் அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனா நோய்த் தொற்று பாதித்தது. உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். இந்நிலையில் 15-ம் தேதி ட்ரம்ப் – ஜோ பைடன் நேரடி விவாதம் நடைபெறுமா என்பது சந்தேகத்துக்கு உரியதாக இருந்தது.

ட்ரம்ப் தரப்பில் இந்த விவாதத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், ஜோ பைடன் தரப்பின் நிலைபாட்டில் ஒரு கண்டிசன் வைக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபரோடு நேரடி விவாதத்திற்கு கண்டிசன் போடும் ஜோ பைடன்!

’ட்ரம்ப்வுடன் விவாதம் செய்ய நானும் தயார்தான். ஆனால், அவர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைய வேண்டும். முழுமையாக கொரோனாவிலிருந்து விடுபட்டால் மட்டுமே நேரடி விவாதத்தில் என்னால் கலந்துகொள்ள முடியும்’ என்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஜோ பைடன்.