அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

 

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார். இதேபோல் அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்..

முன்னதாக அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள் என பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பைடன் பதவியேற்பதற்கு சற்று நேரத்திற்கு முன் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

Image

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பிலும், ஜனநாயக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள். அமெரிக்க அதிபராக எலெக்ட்ரால் காலேஜ் வாக்குகள் 270 எடுக்க வேண்டும். ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்றுவிட்டார். இதனால், ஜோ பைடன் அதிபராவது உறுதியாகியுள்ளது. ஆனாலும், பல மாநிலங்களில் ஜோ பைடன் வென்றதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் தற்போதைய அதிபர் ட்ரம்ப். ஆனபோதும், பல இடங்களிலிருந்தும் ட்ரம்ப்க்கு எதிராகவே தீர்ப்புகள் வந்தன. பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.