தடுக்க முடியாத வெற்றி பாதையில் ஜோ பைடன்! அமெரிக்க தேர்தல்

 

தடுக்க முடியாத வெற்றி பாதையில் ஜோ பைடன்! அமெரிக்க தேர்தல்

அமெரிக்காவில் தேர்தல் முடிவுக்காக உலகமே காத்திருக்கிறது. நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் விறுவிறுப்போடு நடந்தது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

தேர்தல் முடிந்த அடுத்த நாளே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதிபராவதற்கு மெஜாரிட்டியான 270 வாக்குகளை நோக்கி இருவரும் முன்னேறினர். ஆனால், ஜோ பைடன் 264 – ட்ரம்ப் 214 என்ற வாக்குகளோடு குழப்பம் நான்கு நாட்களாக நீடித்து வருகிறது.

தடுக்க முடியாத வெற்றி பாதையில் ஜோ பைடன்! அமெரிக்க தேர்தல்

கொரோனா தொற்று காரணமாகப் பலரும் அஞ்சல் வாக்குகளைச் செலுத்தியதால், அவற்றை எண்ணுவதற்கு தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், தனக்கு தோல்வி நெருங்கும் இடங்களில் எல்லாம் மோசடி நடந்ததாக ட்ரம்ப் குற்றச்சாட்டு கூறி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நீதிமன்றத்தை நாடுகிறார்.

பல தடைகள் இருந்தாலும், ஜோ பைடன் வெற்றி இலக்கைத் தொட இன்னும் 6 வாக்குகள் இருந்தால் போதும். நேற்று அவர் நெவாடா மாகாணத்தில் மட்டும்தான் முன்னிலையில் இருந்தார். இன்றும் அது நீடிக்கிறது. நெருங்கி வந்த ட்ரம்ப் மீண்டும் பின்னோக்கிச் சென்று விட்டார். பைடன் 49.8 சதவிகிதமும் ட்ரம்ப் 40 சதவிகிதமும் வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். 87 சதவிகித வாக்குகள்தான் பெற்றிருக்கிறார்கள் என்றாலும் பைடன் வெல்லவே அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால், இங்கிருந்து பைடனுக்கு 6 வாக்குகள் கிடைத்தாலே அவர் அதிபராகி விடமுடியும்.

தடுக்க முடியாத வெற்றி பாதையில் ஜோ பைடன்! அமெரிக்க தேர்தல்

நெவாடா மட்டுமல்லாது, ஜார்ஜியாவிலும் பைடன் முன்னேறி வருகிறார். நேற்று முன்னிலை வகித்த வந்த ட்ரம்பை முந்திச் சென்றார் பைடன். 49.4 என்று ஒரே அளவில் இருந்தவர்கள் தற்போது 0.1 புள்ளி இறக்கம் கண்டுள்ளார் ட்ரம்ப். வாக்கு எண்ணிக்கையிலும் 4 ஆயிரம் அதிகம் பெற்றுள்ளார் பைடன். 99 சதவிகித வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் பைடனுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இங்கு வென்றால் 16 வாக்குகள் பைடனுக்குக் கிடைக்கும்.

பென்சைல்வேனியா மாகாணத்திலும் ட்ரம்பை முந்திச் சென்றுள்ளார் பைடன். அங்கு இப்போதைய நிலவரப்படி பைடம் 49.6 சதவிகிதமும், ட்ரம்ப் 49.2 சதவிகிதமும் வாக்குகளைப் பெற்றுள்ளனர். இங்கும் 99 சதவிகித வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் பைடனுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இங்கு வென்றால் 20 வாக்குகள் கிடைக்கும்.

தடுக்க முடியாத வெற்றி பாதையில் ஜோ பைடன்! அமெரிக்க தேர்தல்

மூன்று மாகாணங்களில் ஒன்றில் ஏதேனும் ஒன்றில் வென்றால்கூட பைடன் அதிபராகும் எண்ணிக்கையை அடைந்துவிடுவார். ஆனால், எல்லாவற்றிலும் ட்ரம்ப் வென்றால் மட்டுமே சிறிது வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அப்படி நடப்பதற்கான சூழல் இல்லை. ஏனெனில், அஞ்சல் வாக்குகள் பெரும்பாலும் பைடனுக்கு ஆதரவாகவே இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடைகள் தகர்க்கப்பட்டு ஜோ பைடன் அதிபராகும் வழிகள் திறக்கப்பட்டு வருகின்றன. எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் ஜார்ஜியா, பென்சைல்வேனியா மாகாண முடிவுகள் அறிவிக்கப்பட்டு பைடன் அதிபர் என அறிவிக்கப்படலாம்.