‘அதிபரானது இந்த ஒப்பந்தம் நிச்சயம்’ ஜோ பைடன் சொல்வது எதை?

 

‘அதிபரானது இந்த ஒப்பந்தம் நிச்சயம்’ ஜோ பைடன் சொல்வது எதை?

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பிலும், ஜனநாயக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

அமெரிக்க அதிபராக எலெக்ட்ரால் காலேஜ் வாக்குகள் 270 எடுக்க வேண்டும். ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்றுவிட்டார். இதனால், ஜோ பைடன் அதிபராவது உறுதியாகியுள்ளது. ஆனாலும், பல மாநிலங்களில் ஜோ பைடன் வென்றதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் தற்போதைய அதிபர் ட்ரம்ப். ஆனபோதும், பல இடங்களிலிருந்தும் ட்ரம்ப்க்கு எதிராகவே தீர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

‘அதிபரானது இந்த ஒப்பந்தம் நிச்சயம்’ ஜோ பைடன் சொல்வது எதை?

ஜோ பைடன் ஜனவரி மாத இறுதியில் அதிபராகப் பதவி ஏற்க உள்ளார். அவரின் தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் விரைவில் அமெரிக்காவில் இணையும் என அறிவித்தார்.

188 நாடுகளை இணைத்து உருவாக்கப்பட்டது பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம். அதன் அடிப்படை என்பது தொழிற்புரட்சி உருவானதற்கு முன்பிருந்த காற்றின் நிலை, புவி வெப்பம் ஆகியவற்றில் சிறிதளவே அதிகப்படுத்த வேண்டும் என்பதே.

‘அதிபரானது இந்த ஒப்பந்தம் நிச்சயம்’ ஜோ பைடன் சொல்வது எதை?
AFP) (Photo by ANGELA WEISS/AFP via Getty Images)

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், முந்தைய தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி அவர் ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா வெளியேறியது.

தற்போது ஜோ பைடன் அதிபராக வுள்ள நிலையில் அமெரிக்கா மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைய உள்ளது. இது புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தலில் முக்கிய மாற்றத்தை அளிக்கும் என்று கருதப்படுகிறது.