அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான சாலினா குமாரை பெடரல் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. இவர் தற்போது ஓக்லாண்ட் கவுண்டியிலுள்ள மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் (circuit court) நீதிபதியாக உள்ளார். 2007ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை இந்நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் சாலினாவை 2018ஆம் ஆண்டு மிச்சிகன் மாகாண உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியாக நியமித்தது.

அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

தற்போது ஜோ பைடன் நிர்வாகம் சாலினாவை மிச்சிகன் மாகாணத்தின் கிழக்கு மாவட்ட பெடரல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரைந்துள்ளது. பெடரல் மாவட்ட நீதிமன்றம் அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்கக் கூடிய நீதிமன்றம். cirucuit நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உத்தரவை எதிர்த்து விசாரிக்கக் கூடிய அதிகாரம் படைத்தது. ஆனால் அந்த நீதிமன்றத்தால் வழக்குகளை விசாரிக்க முடியாது. தற்போது சாலினா வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்த மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்படவுள்ளார்.

அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!