‘ஜோ பைடன்’ பூர்வீகம் தமிழ்நாடு – ஆச்சர்யத் தகவல்கள்.

 

‘ஜோ பைடன்’ பூர்வீகம் தமிழ்நாடு – ஆச்சர்யத் தகவல்கள்.

By subas Chandra bose
வரும் 2021 ஜனவரி 20-ல் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார் ஜோ பைடன். அவருடன் துணை அதிபராக பதவியேற்கப் போகும் கமலா ஹாரீஸ் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்தான். ஆனால் ஜோ பைடனும் நமது தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்தான் என்ற பரபரப்பு தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.
கடந்த 2013-ம் ஆண்டு, ஜோ பைடன் ஒருமுறை மும்பை வந்திருந்தார். அப்போது, தன்னுடைய முன்னோர்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டார். இதன் பின்னர் 2015ல் வாஷிங்டன் தொலைக்காட்சியில் பேசிய ஜோ பைடன், தன்னுடைய பூட்டனார்” ஜார்ஜ் பைடன் கிழக்கிந்திய கம்பனியில் கேப்டனாக பணியாற்றியிருப் பதாகத் தெரிவித்தார். மேலும் பைடன் என்ற பெயருடன் 5 பேர் மும்பையில் வசித்ததாகவும் தெரிவித்தார்.

‘ஜோ பைடன்’ பூர்வீகம் தமிழ்நாடு – ஆச்சர்யத் தகவல்கள்.

இந்தத் தகவல்களை வைத்து லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரிப் பேராசிரியரான “ டிம் வில்லாஸே “ என்பார் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைதான் ஜோ பைடன் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என நமத்துத் தெரிவிக்கிறது. அந்த ஆய்வுக் கட்டுரை தரும் தகவல்களின்படி, வில்லியம் ஹென்ஹி பைடன், கிரிஸ்டோபர் பைடன் என 2 பைடன்கள் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றியுள்ளனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் லண்டனிலிருந்து இந்தியா வரும் கப்பலில் பணியாற்றியுள்ளனர்.இவர்களில் வில்லியன் ஹென்றி பைடன் ரங்கூனில் தங்கினார்.அவர் 1843-ம் ஆண்டு தனது 51வது வயதில் காலமானார்.
இவரது சகோதரரான கிரிஸ்டோபர் பைடன், சென்னையில் வசித்தார். 1807-ல் ‘ராயல் ஜார்ஜ்’ என்ற கப்பலில் அடி மட்டப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்து,1821ல் அதே கப்பலின் கேப்டன் பொறுப்பை பெற்றார்.1819ல் ஹரியர் பரீத் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் பிறந்தனர்.சுமார் 19 ஆண்டுகள் சென்னையில் வசித்த கிரிஸ்டோபர் பைடன், அறக்கட்டளைகளில் ஈடுபாடு காட்டினார். 1846-ல் அவரது மகன் ஹொராஷியோ மெட்ராஸ் ஆர்ட்டிலரியில் கர்னலாக பதவிவகித்தார். 1858 பிப்ரவரி 25-ம் தேதி கிரிஸ்டோபர் பைடன் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பேராலய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவாக கல் பலகை ஒன்றும் அந்தப் பேராலயத்தினுள் இருக்கிறது.

‘ஜோ பைடன்’ பூர்வீகம் தமிழ்நாடு – ஆச்சர்யத் தகவல்கள்.

புனித ஜார்ஜ் பேராலய பதிவேட்டில் அவர் ஆஸ்துமா காரணமாக உயிரிழந்ததாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஜோ பைடன் குறிப்பிடுவதைப் போல ஜார்ஜ் பைடன் என்ற பெயரில் இங்கே யாரும் இல்லை. “ஜோ பைடனுக்கு இந்தியாவில் முன்னோர் இருந்திருந்தால் அது கிரிஸ்டோபர் பைடனாகத்தான் இருக்க வேண்டும்” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் டிம் வில்லாஸே.
இது தொடர்பாக லண்டனில் உள்ள டிம் வில்லாஸேவை தொடர்பு கொண்டு பிபிசி வெளியிட்டுள்ள தகவலில் “நான் சில வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்திருந்தேன். அங்குள்ள ஜார்ஜ் பேராலயத்தில் கிரிஸ்டோபர் பைடன் நினைவுப் பலகை இருந்தது. அதனை புகைப்படம் எடுத்தேன். “எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கிழக்கிந்தியக் கம்பனியில் கேப்டனாக இருந்தனர்” என்று ஜோ பைடன் சொல்லியிருப்பதற்கும் இதற்கும் தொடர்பிருக்குமா என ஆலோசித்தேன். . ஆகவே பல புத்தகங்கள், ஆவணங்களை படித்தபோது வில்லியம் பைடன், கிரிஸ்டோபர் பைடன் என 2 பேர் பற்றிய தகவல்கள் கிடைத்தது” என்று கூறியுள்ளார்.