அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடனுக்கு காயம்!

 

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடனுக்கு காயம்!

நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக்கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிட்டனர்.

அமெரிக்க அதிபராக எலெக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் 270 பெற வேண்டும். ஜோ பைடன் 306 வாக்குகளைப் பெற்றுவிட்டார். ஆனாலும் ட்ரம்ப் அதிபர் பதவிலியிருந்து விலக பிடிவாதம் பிடித்து வந்தார். தேர்தல் முடிவுகள் குறித்து நீதிமன்றத்தை நாடினார். பென்சில்வேனியா, ஜியார்ஜியா மாகாண முடிவுகள் மீள் பரிசீலனைக்குச் சென்றன. ஆனால், அவையும் ஜோ பைடனுக்குச் சாதகமாகவே வந்தன.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடனுக்கு காயம்!

ஜோ பைடன் ஜனவரி மாத இறுதியில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவரின் வளர்ப்பு நாயுடன் விளையாடிக்கொண்டிந்த ஜோ பைடனுக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு விட்டது. அவரது கால் முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார்.

அப்போது ஸ்கேன் எடுக்கப்பட்டபோது எலும்பு முறிவுகள் இல்லை எனக் காட்டினாலும், அடுத்தடுத்து எடுக்கப்பட்ட ஸ்கேன் முடிவுகள் லேசாக எலும்பு முறிவு இருப்பதைக் காட்டியது. அதனால், அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை. சில வாரங்களுக்கு ஜோ பைடன் ஓய்வில் இருக்க வேண்டியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடனுக்கு காயம்!

74 வயதான ஜோ பைடன் அரை நூற்றாண்டாக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டவர். அவர் அதிபராவது என்பது பல ஆண்டு கனவு. அது நிறைவேறும் சூழலில் உப்படி ஆகியிருப்பது வேதனை அளிக்கிறது.