’ரயில்வேயில் வேலை வேணுமா.. 750 ரூபாய் பணம் கட்டுங்க’ போலி விளம்பரமும் ரயில்வே துறையின் எச்சரிக்கையும்!

 

’ரயில்வேயில் வேலை வேணுமா.. 750 ரூபாய் பணம் கட்டுங்க’ போலி விளம்பரமும் ரயில்வே துறையின் எச்சரிக்கையும்!

உலகளவில் மிகப் பெரிய ரயில்வேக்களில் முதன்மையானது இந்திய ரயில்வே துறை . அதில் வேலைக்குச் சேர கடும்போட்டி நிலவவுவது எல்லோருக்கும் தெரிந்ததே.

மக்களின் வேலைக்குச் செல்லும் ஆவலை முதலீடாக வைத்துக்கொண்டு ஒரு நிறுவனம் போலியாக விளம்பரம் வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு எச்சரிக்கை தரும் விதமாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

’ரயில்வேயில் வேலை வேணுமா.. 750 ரூபாய் பணம் கட்டுங்க’ போலி விளம்பரமும் ரயில்வே துறையின் எச்சரிக்கையும்!

இந்திய ரயில்வே துறையில் 11 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அயல்பணி அடிப்படையில் எட்டு பிரிவுகளின் கீழ் 5285 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக, www.avestran.in என்ற இணையதளம் நடத்திவரும் “Avestran Infotech”  என்ற ஒரு நிறுவனம் 2020 ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஒரு பிரபல செய்திப் பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டிருப்பதாக ரயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும் என்றும், 2020 செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே பணியாளர் தேர்வு குறித்த அனைத்து விளம்பரங்களையும் இந்திய ரயில்வே துறை மட்டுமே வெளியிட்டு வருகிறது என்பது இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு விளம்பரம் வெளியிட எந்தத் தனியார் நிறுவனத்துக்கும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இவ்வாறு விளம்பரம் வெளியிட்டிருப்பது சட்ட விரோதமான செயல்.

’ரயில்வேயில் வேலை வேணுமா.. 750 ரூபாய் பணம் கட்டுங்க’ போலி விளம்பரமும் ரயில்வே துறையின் எச்சரிக்கையும்!

மேலும் இந்திய ரயில்வேயில் குரூப் `சி’ மற்றும் இதுவரை இருந்து வந்த குரூப் `டி’  பல்வேறு பிரிவுகளின் கீழான பணிகள் 21 ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (ஆர்.ஆர்.பி.) மற்றும் 16 ரயில்வே பணியாளர் செல் (ஆர்.ஆர்.சி.) மூலம் மட்டுமே நிரப்பப்படுகின்றனவே தவிர, எந்த ஒரு ஏஜென்சியாலும் நிரப்பப்படுவதில்லை என்பதும் இதன் மூலம் தெளிவு செய்யப்படுகிறது. ரயில்வேயின் மையமாக்கப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கைகள் (சி.இ.என்.) மூலமாக விளம்பரம் செய்வதன் மூலமாக, இந்திய ரயில்வே துறையில் காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட ஏஜென்சி கூறியிருப்பதைப் போல, பணியாளர் தேர்வுக்கு தங்கள் சார்பில் செயல்பட எந்தவொரு தனியார் ஏஜென்சிக்கும் ரயில்வே நிர்வாகம் அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் இதன் மூலம் தெளிவு செய்யப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி ஏஜென்சி மற்றும் இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.