“இந்திய மேப்பில் காஷ்மீர் இல்லை; தனி நாடாக லடாக்” – மத்திய அரசை வம்பிழுக்கும் ட்விட்டர்!

 

“இந்திய மேப்பில் காஷ்மீர் இல்லை; தனி நாடாக லடாக்” – மத்திய அரசை வம்பிழுக்கும் ட்விட்டர்!

ட்விட்டர் நிறுவனருக்கும் பிரதமர் மோடிக்கும் முன்ஜென்ம பகையா என்று தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் மத்திய அரசுடன் வான்டடாக வம்புக்கு போகிறது. ஏற்கெனவே புதிய சட்ட விதிகளுக்கு மத்திய அரசுக்கு ட்விட்டர் போக்கு காட்டி வந்தது. அதுமட்டுமில்லாமல் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக்கை தூக்கி மத்திய அரசின் கடும் கோபத்திற்குள்ளாக்கியது. அதேபோல சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் ரவிசங்கர பிரசாத்தின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்து அதிரடி காட்டியது.

“இந்திய மேப்பில் காஷ்மீர் இல்லை; தனி நாடாக லடாக்” – மத்திய அரசை வம்பிழுக்கும் ட்விட்டர்!
“இந்திய மேப்பில் காஷ்மீர் இல்லை; தனி நாடாக லடாக்” – மத்திய அரசை வம்பிழுக்கும் ட்விட்டர்!

தொடர்ச்சியாக இவ்வாறு மத்திய அரசுக்கு இடையூறாகா இருந்த ட்விட்டர், தற்போது இந்திய மேப்பில் கை வைத்திருக்கிறது. வரைபடத்துக்காக நேபாளத்தில் ஆட்சியைவே கவிழ்த்தது. அந்தளவிற்கு சக்திவாய்ந்தது இந்திய மேப். இந்திய பகுதிகளை நேபாளத்தோடு இணைத்ததால் அந்நாட்டு பிரதமர் கேபி ஷர்மா ஒலியின் ஆட்சிக்கே நெருக்கடி கொடுத்தது. தற்போது பாகிஸ்தான், சீன எல்லையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோதல்கள் கூட இந்தப் பகுதிகளுக்காக தான். இவ்வளவு ஏன் நீண்ட நாட்களாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மோதல் நிலவுவதே காஷ்மீர் பகுதியால் தான்.

தற்போது அதே காஷ்மீரில் கையை வைத்திருக்கிறது ட்விட்டர் நிறுவனம். ட்விட்டர் இணையதளத்தில் Tweef Life என்ற பகுதியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரையும் காணவில்லை. லடாக்கும் இல்லை. இரண்டுமே தனி நாடுகளாக வரைந்து காட்டியிருக்கிறது ட்விட்டர். இந்திய-சீன எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியான லே பகுதியை சீனாவுடன் சேர்த்து மத்திய அரசை உச்சக்கட்ட கோபத்திற்குள்ளாக்கியுள்ளது. ட்விட்டரின் இந்தச் செயலுக்கு மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.