ஜம்மு அண்டு காஷ்மீா் வங்கி லாபம் 66 சதவீதம் வீழ்ச்சி..

 

ஜம்மு அண்டு காஷ்மீா் வங்கி லாபம் 66 சதவீதம் வீழ்ச்சி..

2020 ஜூன் காலாண்டில் ஜம்மு அண்டு காஷ்மீா் வங்கி ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.7.30 கோடி ஈட்டியுள்ளது.

ஜம்மு அண்டு காஷ்மீர் வங்கி தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் ஜம்மு அண்டு காஷ்மீா் வங்கி ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.7.30 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 65.5 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் அந்த வங்கி ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.21.15 கோடி ஈட்டியிருந்தது.

ஜம்மு அண்டு காஷ்மீா் வங்கி லாபம் 66 சதவீதம் வீழ்ச்சி..
ஜம்மு அண்டு காஷ்மீர் வங்கி

2020 ஜூன் காலாண்டில் ஜம்மு அண்டு காஷ்மீர் வங்கியின் மொத்த வருவாய் ரூ.2,160.51 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் ஜம்மு அண்டு காஷ்மீர் வங்கியின் மொத்த வருவாய் ரூ.2,257.42 கோடியாக உயர்ந்து இருந்தது. மேலும் கடந்த காலாண்டில் அந்த வங்கியின் மொத்த வாராக் கடன் அதிகரித்துள்ளது.

ஜம்மு அண்டு காஷ்மீா் வங்கி லாபம் 66 சதவீதம் வீழ்ச்சி..
ஜம்மு அண்டு காஷ்மீர் வங்கி

2020 ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, ஜம்மு அண்டு காஷ்மீர் வங்கியின் மொத்த வாராக் கடன் 10.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அந்த வங்கியின் மொத்த வாராக் கடன் 8.48 சதவீதமாக இருந்தது.
அதேவேளையில் கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, அந்த வங்கியின் நிகர வாராக் கடன் 4.36 சதவீதத்திலிருந்து 3.05 சதவீதமாக குறைந்துள்ளது.