• February
    17
    Monday

Main Area

Main



ஜியோவின் 2020 ஆஃபர்! வாடிக்கையாளர்களை திணறடிக்கும் ஜியோ!!

ஜியோ
ஜியோ

வாடிக்கையாளர்களை ஈர்க்க, தக்க வைக்க புதிய புதிய திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஜியோ அவ்வப்போது அதிரடி ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறது. அதன்படி, 2020 புத்தாண்டை முன்னிட்டு 'ஹேப்பி நியூ இயர் ஆஃபர்' என்ற சலுகையை அறிவித்துள்ளது.

புத்தாண்டை கொண்டாடும் விதமாக 2020 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து அடுத்த ஆண்டு முழுவதும்  நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, இலவச 
வாய்ஸ் கால்( இலவச ஜியோ டூ ஜியோ அழைப்புகள் மற்றும் 1200 நிமிடங்கள் ஜியோ அல்லாத அழைப்புகள்), இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சலுகை இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும்.

Jio

இதேபோல் 2020 ரூபாயை கொடுத்து ஜியோ ஃபோன் வாங்கினால் வரம்பற்ற வாய்ஸ், இலவச எஸ்எம்எஸ் சேவைகள், ஒருநாளைக்கு 0.5 ஜிபி வீதம் டேட்டா சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.