‘அமேசான் பிரைம்,நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட எல்லா OTT தளங்களும் ஒரே இடத்தில்” ஜியோ டிவி பிளஸ் அறிமுகம்!

வர்த்தகத்துறைகளில் முன்னணி நிறுவனமாக திகழும் நிறுவனங்களுள் ஒன்று ஜியோ. இந்த நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் இந்த முறை கொரோனா பாதிப்பால் மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் பேசிய ஜியோ குழுமத்தின் தலைவர், கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் பேஸ்புக் உள்ளிட்ட பிரபலமான நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்ததை போல கூகுள் மேப் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாகவும் ரூ.33,737 கோடி முதலீட்டில் 7.7 பங்கு வாங்கவிருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து, மிகக் குறுகிய காலத்தில் மக்களை ஈர்த்த நிறுவனமாக ஜியோ இருப்பதாக கூறிய அவர், உலகத்தரத்தில் 5 ஜி சேவை கூடிய விரைவில் தொடங்கப்படும் என்றும் 5 ஜி சேவைக்கு ஜியோ இயங்குதளங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியின் போது ஜியோ மீட், ஜியோ மார்ட் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

 

மேலும், அதில் ஒன்றான ஜியோ டிவி பிளஸ் இல், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட எல்லா OTT தளங்களையும் ஒரே லாக்கின் கீழ் பார்க்க முடியுமாம். அதுமட்டுமில்லாமல், குரல் தேடுதல் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் படங்களை தேட முடியும் என்றும் அதில் தொலைக்காட்சி சேனல்களும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...