ஏர்டெல்லை முந்திய ரிலையன்ஸ் ஜியோ.. தொடர்ந்து 2வது மாதமாக புதிய இணைப்புகளை பெற்ற வோடாபோன் ஐடியா

ஏர்டெல்லை முந்திய ரிலையன்ஸ் ஜியோ.. தொடர்ந்து 2வது மாதமாக புதிய இணைப்புகளை பெற்ற வோடாபோன் ஐடியா

கடந்த மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை காட்டிலும் அதிகளவில் புதிய மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது.

தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் கடந்த மார்ச் மாத தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை வெளியிட்டது. அதன்படி, 2021 மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 79.2 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது.

ஏர்டெல்லை முந்திய ரிலையன்ஸ் ஜியோ.. தொடர்ந்து 2வது மாதமாக புதிய இணைப்புகளை பெற்ற வோடாபோன் ஐடியா
பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல் அந்த மாதத்தில்40.6 லட்சம் புதிய இணைப்புகளை கொடுத்துள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து 2வது மாதமாக கடந்த மார்ச் மாதத்திலும் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. அந்நிறுவனம் அந்த மாதத்தில் 10.9 லட்சம் சந்தாதாரர்களை பெற்றுள்ளது. கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 42.29 கோடியாகவும், ஏர்டெலின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 35.24 கோடியாகவும், வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 28.37 கோடியாக உயர்ந்துள்ளது.

ஏர்டெல்லை முந்திய ரிலையன்ஸ் ஜியோ.. தொடர்ந்து 2வது மாதமாக புதிய இணைப்புகளை பெற்ற வோடாபோன் ஐடியா
வோடாபோன் ஐடியா

2021 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நம் நாட்டின் தொலைப்பேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 120.12 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2021 பிப்ரவரி இறுதியில் 118.79 கோடியாக இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மொபைல் எண்களை மாற்றாமலே, சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதியை (மொபைல் நம்பர் போர்டபிலிட்டி) 1.27 கோடி சந்தாதாரர்கள் பயன்படுத்தியுள்ளனர்.