ரிலையன்ஸ் ஜியோ புதிய ரூ.222 ப்ரீபெய்டு பிளான் – டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்

 

ரிலையன்ஸ் ஜியோ புதிய ரூ.222 ப்ரீபெய்டு பிளான் – டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்

டெல்லி: டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கூடிய புதிய ரூ.222 ப்ரீபெய்டு பிளானை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் கூடிய புதிய ரூ.222 ப்ரீபெய்டு பிளானை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளானில் 15 ஜிபி அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஓராண்டுக்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ஆகிய பலன்கள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே வருடாந்திர பிளானில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா பெறாதவர்களுக்கு மட்டும் இந்த சந்தா சலுகை வழங்கப்படும். சொல்லப் போனால் அத்தகைய பயனர்களுக்காகவே இந்த பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனலாம்.

ரிலையன்ஸ் ஜியோ புதிய ரூ.222 ப்ரீபெய்டு பிளான் – டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்

முன்னதாக ரூ.401 காம்போ ரீசார்ஜ் செய்தாலும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.222 ப்ரீபெய்டு பிளானை ரீசார்ஜ் செய்தவுடன் பயனர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆப்பை தங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்ய வேண்டும். அதன் பிறகு ஜியோ எண்ணிலிருந்து OTP ஐப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.