கொரோனாவிலிருந்து மீண்ட அடுத்த நாளில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஹாஜி உசேன் அன்சாரி மரணம்..

 

கொரோனாவிலிருந்து மீண்ட அடுத்த நாளில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஹாஜி உசேன் அன்சாரி மரணம்..

கொரோனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் அமைச்சர் ஹாஜி உசேன் அன்சாரி நேற்று மரணம் அடைந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சிபுசோரன் தலைமையிலான அரசில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் 73 வயதான ஹாஜி உசேன் அன்சாரி. அண்மையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் பலனாக அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கொரோனாவிலிருந்து மீண்ட அடுத்த நாளில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஹாஜி உசேன் அன்சாரி மரணம்..
ஹாஜி உசேன் அன்சாரி

இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் ஹாஜி உசேன் அன்சாரி மரணம் அடைந்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஹாஜி உசேன் அன்சாரியின் கொரோனா வைரஸ் பரிசோதனை அறிக்கையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்து இருந்தது என தெரிவித்தார். நெகட்டிவ் என ரிசல்ட் வந்த நிலையில், ஹாஜி உசேன் அன்சாரி மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்ட அடுத்த நாளில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஹாஜி உசேன் அன்சாரி மரணம்..
சுப்ரியோ பட்டாச்சார்யா

அமைச்சர் ஹாஜி உசேன் அன்சாரி மறைவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், ஹாஜி உசேன் அன்சாரி மரணத்தால் நான் வேதனைப்படுகிறேன். நமது தனி மாநிலத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இறைவன் தன்னுடைய ஆன்மாவை நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் மற்றும் கடினமான காலங்களில் வேதனையை தாங்க அவரது குடும்பத்தினருக்கு சக்தி கொடுப்பார் என பதிவு செய்து இருந்தார்.