கிராமத்தில் ஏரில் மாடுகளை பூட்டி வயலை உழுத ஜார்க்கண்ட் சட்ட அமைச்சர்…. வேடிக்கை பார்க்க குவிந்த மக்கள்

கிராமத்தில் ஏரில் மாடுகளை பூட்டி வயலை உழுத ஜார்க்கண்ட் சட்ட அமைச்சர்…. வேடிக்கை பார்க்க குவிந்த மக்கள்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் சத்யானந்த் போக்தா. அவர் விவசாயத்தை குடும்பத்தை சேர்ந்தவர். அமைச்சர் சத்யானந்த் போக்தா கடந்த சில தினங்களுக்கு முன் தனது சொந்த கிராமமான சத்ராவுக்கு சென்று இருந்தார். கடந்த திங்கட்கிழமையன்று தனது வயலை ஏரில் மாடுகளை பூட்டி உழுது விவசாய பணிகளை அவர் மேற்கொண்டார்.

கிராமத்தில் ஏரில் மாடுகளை பூட்டி வயலை உழுத ஜார்க்கண்ட் சட்ட அமைச்சர்…. வேடிக்கை பார்க்க குவிந்த மக்கள்

அமைச்சர் எளிமையாக விவசாய பணிகளை செய்வதை பார்க்க அந்த பகுதி மக்கள் கூடினர். அமைச்சர் சத்யானந்த் போக்தா விவசாய வேலைகளை செய்வதை கேள்விப்பட்டு அங்கு செய்தியாளர்களும் வந்தனர். அப்போது அமைச்சர் சத்யானந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் விவசாயி மகன், நான் ஒரு போதும் எனது வேர்களை மறக்கமாட்டேன்.

கிராமத்தில் ஏரில் மாடுகளை பூட்டி வயலை உழுத ஜார்க்கண்ட் சட்ட அமைச்சர்…. வேடிக்கை பார்க்க குவிந்த மக்கள்

நம் நாடு விவசாய துறையை சார்ந்தது. நான் விவசாயிகளின் துயரங்களை புரிந்து கொள்கிறேன், நமது அரசு விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் தங்களது அனைத்து உரிமைகளையும் பெறுவர். கோவிட்-19 பரவலை அடுத்து, மக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம். கொரோனா வைரஸ பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்றுங்கள். இந்த நேரங்களில் சமூக விலகல் விதிமுறைகளையும் பின்பற்றுங்கள் என தெரிவித்தார்.