மூத்த மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெண் டாக்டர் புகார் !! தலைமறைவான டாக்டருக்கு போலீஸ் வலை !!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்ச்சியில் செயல்பட்டு வரும் ராஜேந்திர இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த வரும் ஒரு மூத்த மருத்துவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் மருத்துவர் புகார் அளித்துள்ளார். கோவிட் -19 வார்டில் பணிபுரியும் ஜூனியர் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொரோனா வார்டில் பணிபுரியும் அந்த பெண் மருத்துவரை தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்துள்ளார் அந்த மூத்த மருத்துவர். பின்னர் அறைக்கு அந்த பெண் டாக்டர் சென்றவுடன் விளக்குகளை அணைத்துவிட்டு.

அந்த டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் டாக்டர் எவ்வளவோ முயற்சித்தும் வலுக்கட்டாயமாக அந்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் மருத்துவர் புகார் அளித்துள்ளார். விஷயத்தை கேள்விபட்ட மருத்துவமனை நிர்வாகம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மூத்த வயதுடைய மருத்துவர் அருண்குமார் மவுரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜூனியர் டாக்டர்கள் சங்கம், ரிம்ஸ், இந்த வழக்கில் விரைவான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...