‘நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளது’ – உயிரிழந்த ஜெயராஜின் மகள் ஜெர்சி பேட்டி!

 

‘நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளது’ – உயிரிழந்த ஜெயராஜின் மகள் ஜெர்சி பேட்டி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி இந்த வழக்கில் 24 மணி நேரமாக அதிரடி விசாரணை மேற்கொண்ட போலீசார், கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

‘நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளது’ – உயிரிழந்த ஜெயராஜின் மகள் ஜெர்சி பேட்டி!

அதன் படி இன்று காலை 6:30 மணிக்குள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களைத் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விரிவான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இது குறித்துப் பேசிய ஜெயராஜின் மகன் ஜெர்சி, நீதிமன்ற தீர்ப்பையே தாங்கள் நம்பி இருப்பதாகவும் நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளது என்றும் தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைக்கும் வரை உயர்நீதிமன்ற கிளை கண்காணிக்க வேண்டும் என்றும் ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் நன்றி என்றும் கூறினார்.