கொரோனாவால் உயிரிழந்தோரின் செல்போன், நகை திருட்டு !! அகமதாபாத்தில் அதிர்ச்சி சம்பவம் !!

 

கொரோனாவால் உயிரிழந்தோரின் செல்போன், நகை திருட்டு !! அகமதாபாத்தில் அதிர்ச்சி சம்பவம் !!

அகமதாபாத்தில் மருத்துவமனை வளாகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களில் இருந்து நகைகள் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தொற்றுநோய் ஏற்பட்டுள்ள இந்த சோதனையான நேரத்தில் துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவ தெருக்களில் இருப்பவர்களும் உதவுகிறார்கள். மறுபுறம், சிலரின் செயல்கள் மனிதகுலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் கோவிட் -19 யால் உயிரிழந்தவர்களின் சடலங்களில் இருந்து தனிப்பட்ட உடமைகளை பறித்ததாக ஷாஹிபாக் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இறந்தவர்களின் உறவினர்களுக்கு இது ஒரு கொரோனாவல் உயிரிழந்த உறவினர்களுக்கு மேலும் வேதனை தரும் விஷயம் ஆகும்.

குபர்நகரில் வசித்து வந்த உமேஷ் தமைச்சே என்பவர் மே 11 அன்று கோவிட் -19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்து மே 16 அன்று இறந்தார். அவரது உடலை வாங்க குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவரிடம் இந்து 20,000 ரூபாய் மதிப்புள்ள அவரது மொபைல் போன் மற்றும் 10,000 மதிப்புள்ள அவரது கைக்கடிகாரம் காணவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

கொரோனாவால் உயிரிழந்தோரின் செல்போன், நகை திருட்டு !! அகமதாபாத்தில் அதிர்ச்சி சம்பவம் !!
மற்றொரு புகாரில் கொரோனாவால் உயிரிழந்த அனு பானு பதான் என்பவர் அணிந்திருந்த தங்க மோதிரம் மற்றும் தங்க காதணிகள் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மூன்றாவது புகாரில், ஷிவ்புஜன் ராஜ்புத் என்ற ஆட்டோ டிரைவரின் மனைவி பிந்து ராஜ்புத் மருத்துவமனையில் கோவிட்டால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் அணிந்திருந்த ரூ.22,000 மதிப்புள்ள காதணிகளை காணவில்லை.

மேலும் ஒரு சம்பவத்தில் ஷா சாகர் கிஷோர்பாய் என்பவரின் தந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவர் வைத்திருந்த பணம், செல்போன் காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்துள்ளார்.