6 மணிக்குப் பிறகும் திறந்திருந்த நகைக் கடை! – பூட்டி சீல் வைத்த கரூர் நகராட்சி ஊழியர்கள்

6 மணிக்குப் பிறகும் திறந்திருந்த நகைக் கடை! – பூட்டி சீல் வைத்த கரூர் நகராட்சி ஊழியர்கள்

கரூரில் நகராட்சி ஊழியர்களின் உத்தரவை மீறி மாலை 6 மணிக்குப் பிறகும் கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்துகொண்டிருந்த நகைக் கடைக்கு ஊழியர்கள் சீல் வைத்தனர்.

6 மணிக்குப் பிறகும் திறந்திருந்த நகைக் கடை! – பூட்டி சீல் வைத்த கரூர் நகராட்சி ஊழியர்கள்
கொரோனா ஊரடங்கு தற்போதும் அமலில் உள்ளது. அரசு மாலை 6 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி அளித்துள்ளது. கரூரில் சில கடைகள் மாலை ஆறு மணிக்குப் பிறகும் திறந்து இருப்பதால், சரியான நேரத்துக்கு பூட்டிவிட்டு செல்லும்படி நகராட்சி ஊழியர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

6 மணிக்குப் பிறகும் திறந்திருந்த நகைக் கடை! – பூட்டி சீல் வைத்த கரூர் நகராட்சி ஊழியர்கள்ஆனால், இதை மீறி கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்திருந்த நகைக் கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற நகராட்சி ஊழியர்களிடம் கடையை அடைக்க முடியாது என்று கூறி தகராறு செய்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து கடையில் இருந்த அனைவரையும் வெளியேற்றிய நகராட்சி ஊழியர்கள், கடையைப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.