மற்றவர்களை போல் எங்களுக்கும் அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும்- நகைக்கடை தொழிலாளர்கள் கோரிக்கை

 

மற்றவர்களை போல் எங்களுக்கும் அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும்- நகைக்கடை தொழிலாளர்கள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலும் நகைக்கடை செய்யும் தொழிலாளர்கள் தான் அதிகம். கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நகை செய்யும் பட்டறைகள் விழுப்புரத்தில் தான் இருக்கின்றன. மூக்குத்திகள், ஜிமிக்கிகள் உள்ளிட்ட சிறு நகை செய்வதில் இந்தியாவின் ஒட்டுமொத்த தேவையையும் இந்த தொழிலாளர்களே பூர்த்தி செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமலில் உள்ள ஊரடங்கால் அனைத்து நகை செய்யும் பட்டறைகளும் மூடப்பட்டுள்ளன.

மற்றவர்களை போல் எங்களுக்கும் அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும்- நகைக்கடை தொழிலாளர்கள் கோரிக்கை

இதனால் தொழிலாளர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகைத் தொழிலை பொறுத்த வரை ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகே தான் மக்கள் நகைகளை வாங்கச் செல்வார்கள். அதனால் இருப்பில் இருக்கும் நகைகளை விற்பனை செய்வதே பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. அதுமட்டுமில்லமல், புதிதாக நகை செய்யும் சூழலும் தற்போது நிலவவில்லை. ஏனெனில் தொழிலாளர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்ட நிலையில் அவர்கள் மீண்டும் திரும்புவதற்கு எத்தனை மாதங்கள் ஆகும் என்று சொல்ல முடியாது. மேலும், இந்த தொழில் சார்ந்த மற்ற தொழில்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு கூலி கூட வழங்க முடியாத சூழல் இருப்பதாக நகை செய்யும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வறுமை தங்களை பெருமளவில் பாதிக்கும் என கருதும் அவர்கள், மற்றவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போல தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.