27 மாவட்டங்களில் நகைக்கடைகள், துணிக்கடைகள் திறப்பு!

 

27 மாவட்டங்களில் நகைக்கடைகள், துணிக்கடைகள் திறப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளால் 27 மாவட்டங்களில் நகைக்கடைகள், துணிக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

27 மாவட்டங்களில் நகைக்கடைகள், துணிக்கடைகள் திறப்பு!

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நகை கடைகள், துணிக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இன்றி வணிக வளாகங்களும் மால்களும் திறக்கப்பட்டுள்ளன.கொரோனா தொற்று குறைந்து வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் துணிக்கடைகள், நகைக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

27 மாவட்டங்களில் நகைக்கடைகள், துணிக்கடைகள் திறப்பு!

துணிக் கடைகள், நகைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மால்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மால்களில் இயங்கும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.