ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு!

 

ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்திருக்கிறது.

கொரோனாவால் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் போது, நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்தது. இது தங்க விலை உயர்வில் எதிரொலித்தது. அதாவது, பொருளாதார மந்த நிலையால் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து, வரலாறு காணாத ஏற்றத்தை சந்திதது. பொதுமுடக்கம் நீடித்தால் தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்ட நிலையில், நல்ல வேளையாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை குறையத் தொடங்கியது.

ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு!

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4,700க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,600க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,000க்கும் விற்பனையாகிறது.