27 ஆண்டுகளுக்கு பிறகு அமேசான் ஓனர் எடுத்த முக்கிய முடிவு… தேதியை அறிவித்தார்!

 

27 ஆண்டுகளுக்கு பிறகு அமேசான் ஓனர் எடுத்த முக்கிய முடிவு… தேதியை அறிவித்தார்!

அமேசான் நிறுவனரும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருப்பவருமான ஜெஃப் பெசோஸ் தனது சிஇஓ பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமேசான் நிறுவனம் தொடங்கப்பட்ட ஜூலை 5ஆம் தேதி (1994) முறைப்படி விலகுவேன் என்றும் கூறியுள்ளார். இவருக்குப் பதிலாக 20 ஆண்டு காலமாக ஜெஃப்புடன் இணைந்து பயணித்த ஆன்டி ஜாஸே என்பவர் சிஇஓ அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார்.

27 ஆண்டுகளுக்கு பிறகு அமேசான் ஓனர் எடுத்த முக்கிய முடிவு… தேதியை அறிவித்தார்!

நேற்று நடைபெற்ற அமேசான் பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “நான் பொறுப்பிலிருந்து விலகும் தேதியாக ஜூலை 5-ஐ தேர்ந்தெடுத்திருக்கிறேன். இந்தத் தேதி எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான தேதி. அதனால் தான் இதனை தேர்வு செய்துள்ளேன்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தான் விலகப் போவதாகக் கூறினாலும், அதற்கான முறையான தேதியை நேற்று தான் அறிவித்தார்.

Jeff Bezos sells $3.5bn of Amazon shares in a week | Financial Times

ஆரம்பத்தில் அமேசான் நிறுவனத்தை ஒரு சாதாரண புத்தகக் கடையாகவே ஜெஃப் தொடங்கினார். அதற்குப் பின்னர் அமேசானை படிபடியாக வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இன்று ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோச்சுவதற்கு ஜெஃப் பெசோஸின் பங்கு மிக முக்கியமானது. அதனை உச்சத்துக்கு கொண்டு வந்து மிகப்பெரிய பணக்காரராகவும் உயர்ந்திருக்கிறார். நீண்ட நாட்களாக உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஆக்கிரமித்திருந்தார். 57 வயதான ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 16,700 கோடி டாலர். இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.