ஜேஇஇ மெய்ன் தேர்வு ரிசல்ட் வெளியானது… 44 பேர் 100% மதிப்பெண்கள்; 18 பேர் முதலிடம் பிடித்து சாதனை!

 

ஜேஇஇ மெய்ன் தேர்வு ரிசல்ட் வெளியானது… 44 பேர் 100% மதிப்பெண்கள்; 18 பேர் முதலிடம் பிடித்து சாதனை!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவி வந்ததன் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரண்டாவது வருடமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல் சிபிஎஸ்இ, ஜேஇஇ மெயின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

Delayed JEE Main results hits JEE Advanced registrations - The Hindu

இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த ஆண்டு முதல் இந்தத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டம் பிப்ரவரியிலும் இரண்டாம் கட்டம் மார்ச் மாதத்திலும் நடத்தப்பட்டன. ஏப்ரலில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் அடுத்தடுத்த கட்ட தேர்வுகள் நடத்த முடியாமல் போனது.

ஜேஇஇ மெய்ன் தேர்வு ரிசல்ட் வெளியானது… 44 பேர் 100% மதிப்பெண்கள்; 18 பேர் முதலிடம் பிடித்து சாதனை!

பின்னர் மூன்றாம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தோ்வு ஜூலை மாதமும் 4ஆம் கட்ட தோ்வு, ஆகஸ்ட் மாதமும் நடத்தப்பட்டன. இச்சூழலில் ஜேஇஇ 4ஆம் கட்ட முதன்மை நுழைவுத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மேலும் 18 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஆந்திர பிரதேசத்திலிருந்து 4 பேர், ராஜஸ்தானிலிருந்து 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்திலிருந்து தலா 2 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.