ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது!

 

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது!

மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவது போல் ஜேஇஇ, ஐஐடி, என்ஐடி, மத்திய அரசின் நிதி உதவி பெறும் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் பொறியியல் படிப்புகளுக்காக சேருவதற்கு ஜேஇஇ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக ஜேஇஇ தேர்வு நடத்த காலதாமதம் ஆன நிலையில் தேர்வினை ரத்து செய்ய பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த காரணத்தை கொண்டும் தேர்வுகள் ரத்து செய்யப்படாது என தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்தது.

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது!

இதை தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வினை 8.58 லட்சம் மாணவர்கள் எதிர்கொண்டனர்.

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது!

இந்நிலையில் நாடு முழுவதும் ஆகஸ்ட் 26,27,31 மற்றும் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 4ஆம் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியாகி உள்ளது.http://jeemain.nta.nic.in இணையதளத்தில் முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையத்தில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.