நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ மெயின் தேர்வுகள் ரத்தா?

 

நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ மெயின் தேர்வுகள் ரத்தா?

நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக நாளைக்குள் பரிந்துரைகளை வழங்குமாறு தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நிபுணர் குழுக்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ மெயின் தேர்வுகள் ரத்தா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த வைரஸ் தாக்கம் இன்னும் குறையாமல் இருப்பதன் காரணமாக இத்தகைய தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு பொதுத்தேர்வுகள் மற்றும் கல்லூரி பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை போல இந்த ஆண்டு நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்து வரக்கூடிய நிலையில் இந்தத் தேர்வுகளை நடத்த கூடிய தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகளின் நிபுணர்கள் குழு இது சம்பந்தமான பரிந்துரைகளை வழங்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய பரிந்துரைகளை நாளைக்குள் வழங்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது இது குறித்த இறுதி முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது