ஜே.இ.இ மெயின் தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்படும்!

 

ஜே.இ.இ மெயின் தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்படும்!

பொறியியல் படிப்புக்காக நடத்தப்படும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

ஜே.இ.இ மெயின் தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்படும்!

நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் செயல்படும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜே.இ.இ மெயின் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐஐடி, என்.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த நிலையில், ஜே.இ.இ மெயின் தேர்வுகளை கூடுதலாக அந்தந்த மாநில மொழிகளிலும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” அந்தந்த மாநில மொழிகளில் ஜே.இ.இ மெயின் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான திட்டத்தின் கீழ் தாய்மொழியில் தேர்வெழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மேற்கோள் கட்டியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.