ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு!

 

ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவி வருவதன் காரணமாக தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல சிபிஎஸ்இ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு!

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தற்போதைய கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு ஜேஇஇ தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் NTA abhyas ஆப்பை பயன்படுத்தி வீட்டிலிருந்த படியே தேர்வுக்குத் தயாராகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாணவர்கள் தேர்வு குறித்த அபிடேட்டுகளை தெரிந்து கொள்ள www.nta.ac.in, jeemain.nta.ntc.in என்ற இணையதள பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றும் jeemain@nta.ac.in என்ற இ – மெயில் மூலம் தொடர்பு கொண்டு சந்தேகத்தை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.