ஜேஇஇ மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

 

ஜேஇஇ மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரண்டாவது வருடமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிபிஎஸ்இ, ஜேஇஇ மெயின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

ஜேஇஇ மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

இந்நிலையில் தற்பொது கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்ததையடுத்து ஜே.இ.இ. மெயின் 3வது கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25ஆம் தேதி வரையிலும்
நான்காம் கட்டத் தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரையிலும் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இதனால் ஜே.இ.இ. மூன்றாம் கட்டத் தேர்வுக்கு பதிவு செய்யாதவர்கள் ஜூலை 6 முதல் 8 வரையிலும், நான்காம் கட்ட தேர்வுக்கு ஜூலை 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலும் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளுடன் தேர்வு நடைபெறும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கமளித்துள்ளார்.