நீட், ஜெஇஇ தேர்வு தேதிகள் அறிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த வைரஸ் தாக்கம் இன்னும் குறையாமல் இருப்பதன் காரணமாக இத்தகைய தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு பொதுத்தேர்வுகள் மற்றும் கல்லூரி பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை போல இந்த ஆண்டு நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மேலும் நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக நாளைக்குள் பரிந்துரைகளை வழங்குமாறு தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நிபுணர் குழுக்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டிருந்தது.

இந்நிலையில் மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவரது ட்விட்டர் பக்கத்தில், “மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து தரமான கல்வியை உறுதி செய்வதற்காக ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். ஜேஇஇ முதன்மை தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரை நடைபெறும், ஜேஇஇ மேம்பட்ட தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும், நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும் நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...