கொரோனா, வெள்ளம் பிடிக்கும் சிக்கி தவிக்கும் பீகார்… ஆனாலும் தேர்தலை நடத்த துடிக்கும் நிதிஷ் குமார் கட்சி

கொரோனா, வெள்ளம் பிடிக்கும் சிக்கி தவிக்கும் பீகார்… ஆனாலும் தேர்தலை நடத்த துடிக்கும் நிதிஷ் குமார் கட்சி

பீகார் கொரோனா வைரஸ் மற்றும் கனமழையால் உருவான பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையிலும், அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை குறித்த நேரத்தில் நடத்திவிட வேண்டும் என்பதில் முதல்வர் நிதிஷ் குமார் தலைவராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது:

கொரோனா, வெள்ளம் பிடிக்கும் சிக்கி தவிக்கும் பீகார்… ஆனாலும் தேர்தலை நடத்த துடிக்கும் நிதிஷ் குமார் கட்சி

தேர்தல்களை சரியான நேரத்தில் நடத்துவது எங்களது பொறுப்பு. புதிய அரசாங்கம் வளர்ச்சிக்காக செயல்படுவதற்காக நாங்கள் தேர்தல்களில் கவனம் செலுத்துகிறோம். கொரோனா மற்றும் வெள்ள மேலாண்மை ஆகியவை தொடர்பாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக போராட, கொரோனா நோயாளிகளுக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளன.

கொரோனா, வெள்ளம் பிடிக்கும் சிக்கி தவிக்கும் பீகார்… ஆனாலும் தேர்தலை நடத்த துடிக்கும் நிதிஷ் குமார் கட்சி

மேலும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்டால், கடந்த மாதம் முடிவு செய்யப்பட்ட எஸ்ஓ.பிக்கள் பின்பற்றப்படுகின்றன. அதன் அடிப்படையில், நிவாரண முகாம்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.