ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு ஏன்?- ஜே.பி.நட்டா விளக்கம்

 

ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு ஏன்?- ஜே.பி.நட்டா விளக்கம்

திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் வீட்டில் நடைபெற்ற வருமான வரிசோதனை துறை ரீதியான நடவடிக்கை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு ஏன்?- ஜே.பி.நட்டா விளக்கம்

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி. நட்டா, “வருமான வரித்துறையினர் அவர்களின் பணியைச் செய்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. இதனை அரசியலாக்குவது சரியல்ல. தனது வீட்டுக்கு வருமாறு வருமான வரித்துறையினரை உதயநிதி ஸ்டாலின் அழைத்தது தேவையில்லாதது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களில் அதிமுக- பாஜக கூட்டணியே வெற்றிப்பெறும், மேற்குவங்கத்திலும் பாஜகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. புதுச்சேரி, அசாமிலும் பாஜகதான் ஆட்சி செய்யும்” எனக் கூறினார்.