ஜெயராஜ், பென்னிக்ஸை சிறையில் அடைக்க உடல்தகுதி சான்று அளித்த மருத்துவர் திடீரென விடுப்பில் சென்றார்!

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ளது.

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வந்த உயர்நீதி மன்ற மதுரைகிளை தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என தெரிவித்துள்ளது. முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ளது.

இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸை சிறையில் அடைக்க உடல்தகுதி சான்று அளித்த மருத்துவர் வெண்ணிலா திடீரென விடுப்பில் சென்றுள்ளார். ஏற்கனவே 4 நாள் விடுப்பு எடுத்த நிலையில் 15 நாட்களாக நீட்டிப்பு செய்துள்ளார் என சுகாதார துறை இணை இயக்குநர் பொன் இசக்கி தெரிவித்துள்ளார். மருத்துவர் வெண்ணிலா அளித்த சான்றிதழ் அடிப்படையிலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறைக்கு அனுப்பபட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

Most Popular

கொரோனாவில் நோயாளிகளை பாதிலேயே இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் சஸ்பெண்ட்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை எடுத்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மீது...

கமலா ஹாரீஸ் வேட்பாளர் அறிவித்ததும் வந்த தேர்தல் நிதி இத்தனை மில்லியன் டாலரா?

நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின்...

ஈரோடு அருகே மண்சரிவில் சிக்கி தொழிலாளி பரிதாப மரணம்!

தமிழகத்தில் கனமழையின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதனால் இன்று காலை முல்லை...

கொரோனாவில் இருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இந்தியாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!