“உங்க வெறித்தனமான பக்தன்” : பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி சர்ப்ரைஸ் விசிட்!

 

“உங்க வெறித்தனமான பக்தன்” : பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி சர்ப்ரைஸ் விசிட்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

“உங்க வெறித்தனமான பக்தன்” : பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி சர்ப்ரைஸ் விசிட்!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 84 நாட்கள் ஆகிறது. இன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் வெளியேறவுள்ளார். பொதுவாக கடந்த சீசன்கள் மாதிரி இல்லாமல் இந்த சீசன் மிகவும் போரிங்காகவே செல்கிறது. இதனால் பெரும்பாலான கமல் ஹாசன் ரசிகர்ளுக்கு வார இறுதி நாட்களில் கமல் வரும் எபிசோட் தான் சற்று ஆறுதல் தருகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் நடிகர் ஜெயம் ரவி வருகிறார். அவர் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில், இந்த வின்னிங் டைம் நெருங்கிடுச்சி. சூப்பரா விளையாடுறீங்க. உங்களுக்கு தெரியுமான்னு தெரியல செம்மயா விளையாடுறீங்க. உங்களுடைய உண்மையான முகத்தை காட்டினாலே போதும். உண்மையா விளையாடுறீங்க என்று சொல்கிறார்.

“உங்க வெறித்தனமான பக்தன்” : பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி சர்ப்ரைஸ் விசிட்!

அதேபோல் கமல் இந்த நிகழ்ச்சியை ரெகுலரா பார்க்குறீங்களா என்றுஜெயம் ரவி கேட்க, சார் நீங்க எது பண்ணாலும் பார்ப்பேன் சார். நான் உங்களோட வெறித்தனமான பக்தன் என்று சொல்லும்படியாக ப்ரோமோ முடிகிறது.இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனிதா வெளியேறவுள்ளது குறிப்பிடத்தக்கது.