வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்த ஜெ. தீபா எதிர்ப்பு : ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணை!

வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்த ஜெ. தீபா எதிர்ப்பு :  ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களில் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்த ஜெ. தீபா எதிர்ப்பு :  ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணை!

இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் அரசு ரூ.68 கோடி டெபாசிட் செய்து வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது. இதற்கு ஜெ. தீபா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.

வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்த ஜெ. தீபா எதிர்ப்பு :  ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணை!

இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றன. நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.