ஜெயலலிதாவின் நினைவு இல்லம் திறப்பு : முக்கியத் தகவல் இதோ!

 

ஜெயலலிதாவின் நினைவு இல்லம் திறப்பு : முக்கியத் தகவல் இதோ!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும் 28ம் தேதி திறக்கப்படுவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவையடுத்து சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் அவரது இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என அறிவித்த தமிழக அரசு, அதனை கையகப்படுத்தியது. இதற்கு இழப்பீடாக ரூ.68 கோடி அரசு தரப்பில் செலுத்தப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது குறித்து பரிந்துரைக்க சென்னை ஆட்சியர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

ஜெயலலிதாவின் நினைவு இல்லம் திறப்பு : முக்கியத் தகவல் இதோ!

வீடு முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, ஜெயலலிதாவின் உடைமைகளை ஆங்காங்கே வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. அதாவது, அவரது புகைப்படங்கள், பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள் உள்ளிட்டவை மக்கள் காட்சிக்காக வைக்கப்படவிருக்கிறது. அதே போல, அவரது பூஜை பொருட்களும் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது.

ஜெயலலிதாவின் நினைவு இல்லம் திறப்பு : முக்கியத் தகவல் இதோ!

இந்த நிலையில், பொதுமக்களின் பார்வைக்காக வரும் 28ம் தேதி வேதா இல்லம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் ரூ.80 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் வரும் 27ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே அவரது இல்லமும் திறக்கப்படுகிறது.